இலங்கைக்கு மத்திய அரசு போர்க் கப்பல் வழங்கியதற்கு கருணாநிதி கண்டனம்

இலங்கைக்கு மத்திய அரசு போர்க் கப்பல் வழங்கியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர்களுக்கும், மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கும் இலங்கை அரசு தொடர்ந்து பல்வேறு இன்னல்களை விளைவித்த போதிலும், மத்திய அரசு, இலங்கை அரசுக்கு உதவி செய்து வருவதாக கூறியுள்ளார்.

அந்த வரிசையில் இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான வராஹா என்ற போர்க் கப்பலை சிங்களக் கடற்படைக்கு இந்தியா இலவசமாக தற்போது வழங்கியுள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ராணுவத்தினருக்கு கடந்த காலத்தில் பயிற்சி அளித்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது போர் கப்பல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த போர்க் கப்பலை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும் மத்திய அரசை கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

Check Also

அரிசி குடோனாக மாறும் ராஜபக்சே கட்டிய விமான நிலையம்

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச தனது சொந்த ஊரில் கட்டிய விமான நிலையம், தற்போதைய அரசால் அரிசி குடோனாக மாற்றப்படுகிறது. …