இளங்கோவனுக்கு ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த முடியாது : உயர்நீதிமன்றம்

இளங்கோவனின் முன் ஜாமினுக்கான நிபந்தனைகளை தளர்த்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்ற என்ற இளங்கோவன் தரப்பு வேண்டுகோளை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். காவல்துறை இளங்கோவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட வரும் போது இளங்கோவனுடன் 2 பேர் வரலாம் என்றும், தேவைபட்டால் இளங்கோவன் தரப்பும், காவல்துறையும் அந்தகாட்சிகளை பதிவு செய்யலாம் என்றும் நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

காமராஜர் அறக்கட்டளையில் பணிபுரிந்த வளர்மதி என்ற பெண், இளங்கோவன் தன்னை மிரட்டியதாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி இருந்தது குறிப்பிடதக்கது.

Check Also

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஊரட‌ங்கால் பரிதவிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ. சாலை, ரெயினி மருத்துவமனை அருகே, பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு …