இளங்கோவன் ஜாமீன் நிபந்தனை ரத்து: உயர் நீதிமன்றம்

காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற முன் ஜாமீன் நிபந்தனையை, இளங்கோவனின் கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது வளர்மதி என்பவர் தொடர்ந்த வழக்கில், மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தில் தினமும் இளங்கோவன் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், நிபந்தனையை தளர்த்தக் கோரி இளங்கோவன் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தில் இளங்கோவன் தினமும் கையெழுத்திட தேவையில்லை என்று நிபந்தனையை நீக்கி உத்தரவிட்டார்.

மேலும், இளங்கோவன் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், போலீஸ் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Check Also

சுறு சுறு ஓட்டு சேகரிப்பில் திமுக தொண்டர்கள்…

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், கழக தலைவர் தளபதி திரு. மு.கஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற …