ஈராக்கில் பழிக்குப் பழியாக 4 பேரை உயிருடன் எரித்துக் கொன்றனர் ஐஎஸ் தீவிரவாதிகள்

ஈராக்கில் 4 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்து, அதன் வீடியோ காட்சியை ஐஎஸ் தீவிரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோ காட்சியில் 4 பேர் இரும்புச் சங்கிலியால் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில், எரித்துக் கொல்லப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது.

ஈராக் அரசு படையினர் தங்கள் அமைப்பை சேர்ந்த 4 பேரை உயிருடன் எரித்து கொன்றதாகவும், அதற்கு பழிவாங்கவே, தற்போது 4 பேரை எரித்து கொன்றதாகவும் ஐஎஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் பாக்தாத்திலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள ருட்பா நகரில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

isis2 isis3 isis4 isis5

Check Also

ஒரிசாவில் தமிழ் பொறியாளர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை

ஒடிசாவில் பணியாற்றி வந்த மதுரையைச் சேர்ந்த உதவி பொறியாளர் ஒருவர் இரும்புக்கம்பியால் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை ஐயர் பங்களா பகுதியைச் …