உச்ச நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தற்போது உச்ச நீதிமன்றத்துக்கும் மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Check Also

ஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது : உச்ச நீதிமன்றம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 1992–ம் ஆண்டு, கோபால் சுக்லா என்பவர் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணி புரிந்தார். …