உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக…. மெட்ரோமேன் பத்திரிகையின் களப்பணி…

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்காக வாரம் இரு முறை மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில கண்காணிப்பு குழு தலைவரும், “மெட்ரோமேன்” தமிழ் மாத இதழ் நிறுவனர்&ஆசிரியருமான ” மெட்ரோமேன்” திரு.  S. அன்பு அவர்களும் அவருடன் நிர்வாகிகள் இணைந்து , 06.06.2021, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில், தண்டையார்பேட்டை மாதா கோயில் தெரு, திருவள்ளூவர் நகர் பகுதி வாழ் ( சுமார் 500 நபர்களுக்கு) மக்களுக்கு உணவு வழங்கி சிறப்பித்தனர். இதுப பற்றி நம்மிடம் பேசிய திரு அன்பு  அவர்கள் கூறுகையில், ” இதை தனியொரு முயற்சியாக இல்லாமல் எங்களது பணியினை கண்ணுறும் சமூக ஆர்வலர்கள்  தாமாகவே முன்வந்து பொருட்களாகவோ, பணமாகவோ தருவதையும் நிர்வாகிகளின் முழுமையான ஒத்துழைப்பிலே இத்தகைய பணியினை தொய்வின்றி செய்ய முடிகிறது. இதற்காக தக்க சமயத்தில் எங்களுக்கு உதவி வருபவர்களுக்கு மனமார்ந்த நன்றி என  தெரிவித்தார்.    

செய்தியாக்கம்:   ” ஜீனியஸ்”  K. சங்கர் ஒளிப்பதிவு : மெட்ரோமேன் குழு.

Check Also

தொடரும் PPFA வின் மக்கள் நலப்பணி…

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …