உயிர் காக்க வெட்டி வேர் முக கவசம் அறிமுகம்…

இன்றைய காலகட்டத்தில் நமக்கு உயிர் கவசமாக முககவசம் அவசியமாகிவிட்டது. ‌நாம் அறிமுகப்படுத்தியுள்ள முக கவசமானது வெட்டி வேரை உள்ளடக்கி, நாம் சுவாசிக்கின்ற கெட்ட காற்றினை சுத்திகரித்து நல்ல காற்றினை வழங்கிடும். இது முழுக்க முழுக்க இயற்கை மூலிகையான வெட்டிவேரால் “எலைட் நிறுவனம்” தயாரிப்பில் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனை நம் பகுதி வாழ் மக்களுக்காக அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கின்றோம். அந்த வகையில் போலீஸ் பப்ளிக் பிரண்டஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியருமான “கிங் மேக்கர்” திரு. B. செல்வம் அவர்களும் இணைந்து, சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் அலுவலகம் – வடக்கு மண்டலம் காவல் இணை ஆணையாளர் திரு கபில் சரத்கர் IPS அவர்களை சந்தித்து “எலைட்” வெட்டி வேர் முககவசத்தினை அளித்தனர்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய ஆணையர் அவர்கள் முக கவசத்தின் பயன்களை கேட்டறிந்தது மட்டுமல்லாமல் நமது சங்கம் செயலாற்றி வரும் விதத்தினையும் கேட்டு பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ரூ. 4000/ மதிப்புள்ள எலைட் வெட்டி வேர் முக கவசங்களை அலுவலகத்திலுள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் வழங்கப்பட்டது.

படங்கள் : வே. கந்தவேல்
செய்தியாக்கம்:
” கிங்மேக்கர்” பா. செல்வம்
” ஜீனியஸ்” கே. சங்கர்
🙏🙏🙏🙏🙏🙏🙏

Check Also

அன்னையின் நினைவு நாளில்…அன்னதானம்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி …