உழைப்பால் உயர்ந்த மனிதர் ஐயா H வசந்தகுமார் அவர்களது முதலாம் ஆண்டு அஞ்சலி…

வாழ்ந்து மறைந்தவரல்ல இவர். மறைந்தாலும் வாழ்பவர் அல்லவா இவர் என மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும், கன்னியாகுமரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐயா H வசந்தகுமார் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு நாள் 28.08.2021, சென்னை, சைதாப்பேட்டை, அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,சென்னை நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் திரு மின்னல் ஸ்டீபன் அவர்கள் தலைமையில் தொழிலதிபர் திரு. வி.ஜி.பி. சந்தோசம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் திரு.N.R. தனபாலன், சிம்ம பேரவை நிறுவனர், தலைவர் திரு. ராவணன் ராமசாமி, , அன்னை வேளாங்கண்ணி கல்லூரியின் தலைவர் திரு S. தேவராஜ் ,செயலாளர் D.தேவ் மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியர், தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் துணை செயலாளர் (வடசென்னை மாவட்டம்) “கிங்மேக்கர்” திரு.Ln B.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Check Also

தமிழ்நாடு முதல்வரது 2 ஆம் கட்ட கொரோனா நிதி…

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த இரண்டாம் கட்ட கொரோனா நிதி ரூ. 2,000 மற்றும் …