ஊரட‌ங்கால் மக்கள் பசிப்பிணியை போக்கும் PPFA..

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக மதிய உணவினை தொடர்ந்து 13 ஆம் நாளாக வழங்கி வருகின்றது.

அந்த வகையில், 06.06.2021, ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும் ஜீனியஸ் டீவி தலைவருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்- திருமதி சுகந்தி பரமேஸ்வரன் அவர்களது திருமணநாளையொட்டி (வெள்ளிவிழா காணும் 25 ஆம் ஆண்டு) மதியம் 1 மணியளவில், இராயபுரம், PPFA தலைமை அலுவலக வளாகத்தில் சுமார் 300 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஐட்ரீம் R. மூர்த்தி, 50 வது வட்ட செயலாளர் ‌இராயபுரம் முனைவர் சு.சேகர், பகுதி பொறுப்பாளர்கள் திரு. R. செந்தில்குமார், திரு. வ.பெ.சுரேஷ், பகுதி நிர்வாகிகள் திரு. P.சேகர், திரு கு. சுந்தர், திரு. R.V.கணேஷ் மற்றும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில, இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Check Also

அன்னையின் நினைவு நாளில்…அன்னதானம்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி …