ஐஐடி யில் எம்.எஸ்சி., ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்புகளில் சேர ஜேம்-2016 நுழைவுத்தேர்வு

இந்திய அறிவியல் நிறுவனத்தில்(ஐஐஎஸ்சி) வழங்கப்படும் ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்பு, 14 ஐஐடி-க்களில் வழங்கப்படும் இரண்டாண்டு எம்.எஸ்சி. படிப்பு, ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.-பிஎச்.டி, எம்.எஸ்சி.-எம்.டெக். உள்ளிட்ட பிற முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர ஜேம் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்.

இந்த “ஜேம்’ தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வி நிறுவனங்கள் தவிர, பிற கல்வி நிறுவனங்களும் இந்தத் தகுதித் தேர்வை மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்கின்றன.

2016-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வை சென்னை ஐஐடி நடத்தவுள்ளது. 2016 பிப்ரவரி 7 ஆம் தேதி ஆன்-லைன் முறையில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் சமர்ப்பிக்க அக்டோபர் 14-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://jam.iitm.ac.in/jam2016/ என்ற இணையதளத்தை மாணவர்கள் தொடர்புகொள்ளலாம்.

jam-2016jam-2016

 

Check Also

மருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுகளில், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு …