ஒரிசாவில் தமிழ் பொறியாளர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை

ஒடிசாவில் பணியாற்றி வந்த மதுரையைச் சேர்ந்த உதவி பொறியாளர் ஒருவர் இரும்புக்கம்பியால் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சார்ந்த டிரைவர் ஒருவரின் மகன் கணேஷ் குமார். இவர் ஓரிசா மாநிலம் ரூர்கோலாவில் உள்ள இரும்பு உற்பத்தி ஆலையில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு ஒப்பந்த பணியாளர் ஒருவரால் கணேஷ் குமார் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து முறையான தகவல் எதுவும் தங்களுக்கு தெரிவிக்க வில்லை என்று உயிரிழந்த கணேஷ் குமாரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Check Also

ஈராக்கில் பழிக்குப் பழியாக 4 பேரை உயிருடன் எரித்துக் கொன்றனர் ஐஎஸ் தீவிரவாதிகள்

ஈராக்கில் 4 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்து, அதன் வீடியோ காட்சியை ஐஎஸ் தீவிரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த …