கண்டெய்னர் லாரி விபத்து, வாலிபர் கால் முறிவு…

19-06-19 காலை 11 மணியளவில்
இராயபுரம் கிழக்கு கல்மண்டபம் சாலையிலிருந்து, சூரியநாராயண செட்டி தெருவிற்கு திரும்ப வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, இந்த சந்திப்பில் மேல் நோக்கி செல்லும் சிக்னல் கம்பி மீது உரசியதில் அதனையொட்டி இருந்த சிக்னல் கம்பம் எதிர்பாராத விதமாக அறுந்து, அதனருகே நின்ற 40 வயதுடைய வாலிபர் மேல் விழுந்ததில் அவருடைய கால் முறிந்ததது.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போக்குவரத்து போலீஸார் அந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து ஓட்டுனரை கைது செய்த நிலையில் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த பகுதியில் இது போன்ற கனரக வாகனங்களை காவல்துறையினர் அனுமதி்ப்பதை தவிர்க்கும் பட்சம் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்..

படமும், தகவலும்
ஜீனியஸ் டீம்…

Check Also

பிஜேபி சார்பில் நலத்திட்ட உதவிகள்…

மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பாரதத்தின் பிரதமராக பதவியேற்று முழுமையாக ஏழு ஆண்டுகள் கடந்து எட்டாம் …