கருப்புப் பண பட்டியலில் சோனியா, ராகுல் பெயர்கள்: சுப்ரமணியசாமி குற்றச்சாட்டு

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்களின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் உள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

சோனியா, ராகுல் இருவரும் கருப்புப் பணத்தை பதுக்கியிருப்பது குறித்து மத்திய நிதி அமைச்சகத்துக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்.  கருப்புபண மீட்புக் குழுவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால் இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சோனியா, ராகுல் தவிர 8 முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் பட்டியலில் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published.