கல்புர்கி கொலை: சந்தேகிக்கும் இருவரின் உருவ படங்கள் வெளியீடு

கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கில், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் உருவ படங்களை கர்நாடக போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கன்னட எழுத்தாளரான கல்புர்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை, கர்நாடக மாநிலம் தர்வாத்தில், மர்மநபர்கள் இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அம்மாநில சிபிசிஐடி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரின் உருவப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்தும் ஆய்வு நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Check Also

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் பேச்சு கண்டிக்கத்தக்கது: ஜி.கே.வாசன்

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் நியாயமற்ற பேச்சு கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். …