காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூன்று நாளாகியும் விடையில்லை

கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு பறந்துகொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ராடார் திரைகளில் இருந்து காணாமல்போய் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆகியும் அது என்ன ஆனது என்று தெரியவ ராமல் இருக்கும் சூழ்நிலையில் மலேசிய அதிகாரிகள் தேடுதல் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சீன அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பல்வேறு நாடுகள் முயற்சி எடுத்துவருகின்றன என்றாலும் இந்த விமானத்தின் பாகங்ககள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் வியட்நாமுக்கு அருகே தென் சீனக் கடலில் சில பொருட்கள் மிதப்பதை பார்த்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வந்துள்ளன. மலாக்கா கடல் பகுதியையும் சேர்த்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்

இந்த விமானம் காணாமல்போன நேரத்தில் அதில் பயணிகளும் சிப்பந்திகளுமாக 239 பேர் இருந்தனர். பயணிகளில் பெரும்பான்மையானோர் சீனர்கள் ஆவர்.

Check Also

மாயமான அல்ஜீரிய விமானம் ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் பகுதியில் விபத்துக்குள்ளாகியது #AH5017

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாஸோ விமான நிலையத்தில் இருந்து 116 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் அல்ஜீரியா விமானம் நைஜர் பகுதியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *