காலம் மாறுகிறது; காயமும் ஆறுகிறது!

குற்றப் பரம்பரையாக சித்தரிக்கப்பட்ட ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் கரை நீக்கப்படுகிறது இறைவனின் உதவியால்…

தீவிரவாதத்தின் அடையாளமாய் காட்டப்பட்ட தாடியும் குல்லாவும், இன்று அன்பு மற்றும் சேவையின் குறியீடுகளாய் மாறிக்கொண்டிருக்கிறது கால ஓட்டத்தில்!

சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் எழுத்தாளரும் திரைப்பட உதவி இயக்குநருமான மாரி செல்வராஜ், ‘மறக்கவே நினைக்கிறேன்’ எனும் தொடரை எழுதினார். அதில் ஒருமுறை முஸ்லிம்கள் குறித்து இப்படி கூறியிருந்தார்;

“கொஞ்ச நாட்களுக்கு முன் கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் என் இயக்குநரைப் பார்ப்பதற்காக எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் ஒரு தொடக்கப் பள்ளிக்குச் சென்று 100 குழந்தைகளிடம் க்ரேயோன் பென்சில்களைக் கொடுத்து அவரவர் விருப்பப்படி தீவிரவாதிகளை வரையச் சொன்னாராம். அப்போது அந்தக் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் இவை என்று சொல்லி ஒரு ஆல்பத்தை எங்களிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் அதிர்ச்சி. 100 குழந்தைகளும் 100 தீவிரவாதிகளை வரைந்திருந்தாலும், அந்த 100 தீவிரவாதிகளிடமும் சொல்லி வைத்து வரைந்ததுபோலக் காணப்பட்ட ஒற்றுமைகள் தான் அதிர்ச்சிக்குக் காரணம். ஆம், அத்தனை தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்திருந்தார்கள்; தாடி வளர்த்திருந்தார்கள். சில தீவிரவாதிகள் முழங்கால் வரை வேட்டி கட்டியவர்களாகக் கூட இருந்தார்கள்.” என்று கூறி வேதனைப் பட்டிருந்தார்.

இது அன்று நடந்தது. இன்று நடந்திருப்பது என்ன தெரியுமா?

சென்னை ஒரு பள்ளியில் மழை வெள்ள நிவாரணம் குறித்து நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில், அக்‌ஷரா ஸ்ருதி எனும் குழந்தை வரைந்த ஓவியம்தான் இது


காலம் மாறுகிறது; காயமும் ஆறுகிறது!

காலம் மாறுகிறது; காயமும் ஆறுகிறது!

-ஆளூர் ஷாநாவாஸ்

Check Also

இரயில் பயணிகளின் நலன் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் காவல் அதிகாரி….

பரபரப்புக்கு பஞ்சமில்லாத சென்னை எம். ஜி. ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  மைக்கே இல்லாமல் தன்னை சுற்றியுள்ள கூட்டத்தின் முன் …