காளியம்மன் திருக்கோயிலில் திருக்கல்யாணம் திருக்கல்யாணம்…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் 1 வது தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காளிமம்மன் திருக்கோயிலில் 96 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 24.02.2021 புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

26.02.2021 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நிகழ்வு ஏராளமான பக்தர்களின் முன்னிலையில் நடைபெற்றது. முடிவில் அம்பாளும், சிவனும் தம்பதிசமேயதராய் மணக்கோலத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் புரிந்தனர்.

வருகைத் தந்த பக்தர்கள் அனைவருக்கும் கல்யாண விருந்தினை தந்து சிறப்பித்தனர்.
அன்று மாலை பக்தி பரவசமாய் பெண்கள் திருவிளக்கு ஏந்தி பாடியபடி முன் செல்ல, அம்பாள் அலங்காரவல்லியாய் கோயிலினை சுற்றியுள்ள வீதிகளில் (எம்.சி.சாலை, சிங்காரத்தோட்டம், குமாரசாமி தெரு, ஆதம் தெரு, சோமு தெரு, இராமன் தெரு) வலம் வந்து அப் பகுதி மக்களை பரவசப்படுத்தியது குறிப்பிடதக்கது.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்: வே. கந்தவேல்
“ஜீனியஸ்’ K.சங்கர்
மேற்பார்வை ஆக்கம்: “கிங்மேக்கர்” Ln B.செல்வம்

Check Also

வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …