காவல்துறை உதவி ஆணையாளருடன் “ஓர் இனிய சந்திப்பு”

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களின் வழிக் காட்டுதலின் படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியருமான ” கிங் மேக்கர்” திரு. B. செல்வம் அவர்கள் வண்ணாரப்பேட்டை சரகம் உதவி ஆணையாளர் திரு P.P. ஜூலியஸ் சீசர் M.A., அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து, நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் பற்றி எடுத்துரைத்தார்.

அதுமட்டுமல்லாது நமது “ஜீனியஸ் ரிப்போர்ட்டர்” தமிழ் மாத இதழ் (கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 2020) களை தந்து நாம் கடந்து வந்த பாதையினை கேட்டறிந்த உதவி ஆணையாளர் அவர்கள் நம் பணி சிறக்க வாழ்த்தியதோடு, தொடர்ந்து காவல் துறையுடன் இணைந்த பணி செய்ய உதவிகள் தேவைப்படின் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என நம் சிறப்பாசிரியரோடு மிகுந்த நட்புடன் எளிமையாக பேசியது, மிகவும் மன மகிழ்ச்சியை தந்தது. அவருக்கு ஒரு “ராயல் சல்யூட்”

என்றும் நட்புடன்…
” ஜீனியஸ்” K.சங்கர்
தலைமை நிலைய செயலாளர்,
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்,
தமிழ்நாடு.
துணை ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ்

Check Also

சினிமா பாணியில் திருடனை மடக்கிய போலீஸ்…

சென்னையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்து பைக்கில் ஓட்டம் பிடித்த திருடனை, சினிமா பாணியில் தனது பைக்கில் விரைந்து சென்று …