கிண்டி தொழிற்பேட்டையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழில்வளாகம் : முதல்வர் ஜெயலலிதா

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,

1958-ஆம் ஆண்டில் கிண்டி தொழிற்பேட்டை முதன்முதலாக தமிழக அரசால் சென்னை நகரின் மையப் பகுதியில் உருவாக்கப்பட்டது. இத்தொழிற்பேட்டையில் கிடைமட்ட விரிவாக்கத்திற்கான நிலம் பற்றாக்குறையாக இருப்பதால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்கும்; மேலும் கிண்டி தொழிற்பேட்டையில் ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களின் விடுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும்; அடுக்குமாடி தொழில் வளாகம் ஏற்படுத்திக் தருவது அவசியமாகிறது.

எனவே கிண்டி தொழிற்பேட்டையில் ஓர் அடுக்குமாடி தொழில்வளாகம் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிவித்தார் முதல்வர்.

Check Also

முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் …