குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி காலமானார்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 74.

சுவாசக் கோளாறு காரணமாக சுவ்ரா முகர்ஜி கடந்த 7-ம் தேதியன்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கெனவே இதய நோயாளியான அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10.50 மணியளவில் இயற்கை எய்தினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

jeyalalithaகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தங்கள் அன்பு மனைவி சுவ்ரா மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

இத்தகைய சூழலில் எந்த ஒரு வார்த்தையும் தங்களுக்கு ஆறுதல் அளிக்க முடியாது என்பது தெரியும். இருப்பினும், இத்தருணத்தில் தங்கள் துயரத்தில் பங்கேற்க விரும்புகிறேன்.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இத்துயரத்தை தாங்கிக் கொள்ளும் வலிமையை இறைவன் உங்களுக்கு அருள வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …