குடியாத்தம் அருகே போலி மருத்துவர் கைது போலீசார் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜிட்டப் பள்ளி பகுதியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட எஸ்பி மணிவண்ணனுக்கு புகார் சென்றுள்ளது. இதனை அடுத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க குடியாத்தம் தாலுக்கா காவல் நிலைய போலீசாருக்கு எஸ். பி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் மற்றும் குடியாத்தம் தாலுக்கா காவல் நிலைய போலீசார் இணைந்து புகாரில் சிக்கிய கிளினிக்கில் சோதனை செய்துள்ளனர். அப்பொழுது மஸ்தான் , வயது 40 என்பவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.  பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Check Also

மணல் குவாரியில் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்

கந்தனேரி மணல் குவாரியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் அணைக்கட்டு …