குலகுரு வள்ளல் S I அழகர்சாமி செட்டியார் அவர்களது திருஉருவச் சிலை திறப்பு விழா..

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்கிற பாடல் வரிகளைக் கேட்கின்ற போது நம்மையறியாமல் இராயபுரம், ஆதம் தெருவில் உள்ள பிரம்மாண்டமான மேல்நிலைப் பள்ளியை உருவாக்கிய வள்ளல் S I அழகர்சாமி செட்டியார் பற்றி நினைக்கத் தோன்றும்.

தன் வாழ்நாளில் பிறர் நலனில் அதுவும் அனைத்து மக்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில், மதுரை திருமங்கலத்தில் 1878 ல் பிறந்து நம் வடசென்னை வண்ணையம்பதில் வாழ்ந்து தன் வாழ்நாள் உழைப்பினை, 1946 ம் ஆண்டில் S I அழகர்சாமி செட்டியார் தர்ம கல்வி ஸ்தாபனத்தினை உருவாக்கி தந்துள்ளது பெருமைப்பட வேண்டிய ஒன்று.

அத்தகைய பெருமை வாய்ந்த வள்ளல் அவர்களின் திருஉருவச் சிலை திறப்பு விழா 22-05-19 காலை 11 மணியளவில் பள்ளி வளாகத்தில் கோலகலமான முறையில் நடைபெற்றது.

முன்னதாக திரு.M.குப்புசாமி செட்டியார், திரு. A.செல்வம் செட்டியார் குத்து விளக்கு ஏற்ற இறைவணக்கத்தை திரு. S. பாஸ்கரன் பாடினார்.

வரவேற்புரயை திரு. S.கோவிந்தராஜ் நிகழ்த்த, முன்னுரையை விழா ஒருங்கிணைப்பாளர் திரு.V.வீரைய்யா (எ) காமாட்சி V. கண்ணன் வழங்கினார். தொடர்ந்து திரு. S. D. முத்துராஜ் அவர்கள் தலைமையில் திரு. G. சண்முகம் செட்டியார் அவர்கள் வள்ளல் அவர்களது திரு உருவச்சிலை திறந்து வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை சிங்காரத் தோட்டம் 24 மனை தெலுங்கு செட்டியார் இளைஞர் சங்கத்தை சேர்ந்த திரு. G.உமாபதி, திரு. M. இருளப்பன், R.மூர்த்தி, G. சரவணன், D. சிவசுப்பிரமணி, சென்னை மாநகர் 24 மனை தெலுங்கு செட்டியார் கல்விக்குழுவை சேர்ந்த திரு. D.வெங்கடேசன், V.இராஜேந்திரன், D. போஸ்,D.அன்புமணி, வள்ளல் S.I அழகர்சாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி பள்ளிக்குழு திரு M.சிவக்குமார், திரு. R.மூர்த்தி, திரு.V.B. மோகன் திரு.S.சங்கர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வள்ளல் அவர்களது பெருமைகளை வண்ணையம்பதி தெலுங்கு செட்டி மஹா ஜன சங்கம், வடசென்னை தெலுங்கு செட்டியார் இன மாளிகை, பர்மா 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம், பர்மா 24 மனை தெலுங்கு செட்டியார் கல்வி தர்ம அறக்கட்டளை, ஸ்ரீகாாட்சியம்மன் 24 மை தெலுங்கு செட்டியார் நண்பர்கள் குழு ஆகியோர் எடுத்துரைத்தனர்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இப்பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட முன்னாள் கல்விக்குழு தலைவரும், பள்ளி தாளாளர்& செயலாளரும், போலீஸ் பப்ளிக் பிரண்டஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளருமான “செயல் சிங்கம்” திரு. லயன் சி. பாலகிருஷ்ணன், மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், ஆகியோருடன் பள்ளி தலைமையாசிரியர் திரு. நடராஜன், பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் திரு. G. சீதாபதி நன்றியுரையாற்றினார். வருகைத்தந்த அனைவருக்கும் அறுசுவை விருந்து அளித்தது கூடுதல் சிறப்பாகும்.

ஔிப்பதிவு:
“ஜீனியஸ்” கே. சங்கர்
படத்தொகுப்பு:
அமுரா (ஜீனியஸ் டீவி)
இயக்கம்(மேற்பாா்வை)
“செயல் சிங்கம்” லயன் சி. பாலகிருஷ்ணன்
தயாரிப்பு, இயக்கம்: ” நட்பின் மகுடம்”
MJF Ln Dr லி. பரமேஸ்வரன்

Check Also

வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …