குழந்தைகளை உற்சாகப் படுத்திய நீதிபதி ஐயா அவர்கள்…!

நமது PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், PPFA சார்பாக மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2வது சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா 20.01.2020 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு. S. இதயாதுல்லா தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு நீதியரசர் திரு. T.N. வள்ளிநாயகம், மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன், மாநில பொதுச்செயலாளர் ” செயல் சிங்கம்” Ln C. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டு மாணவ/வியர்க்கு நோட்டு புத்தகங்களை வழங்கி சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நீதியரசர் , “பள்ளி குழந்தைகளை நேரில் கண்டு புத்தகங்களை வழங்க வேண்டியே இத்தனை தூரம் பயணம் செய்து வந்ததை உற்சாகத்துடன்” குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியினை, மாநில கண்காணிப்பு குழு தலைவர் திரு. P.K. மோகன சுந்தரம் தொகுத்து வழங்க, மாநில இளைஞர் அணி தலைவர் திரு.Ln. L. வேலாயுதம், முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி திரு. B.லட்சுமி நாராயணன், மாநில செயற்குழு உறுப்பினர் திரு.B. செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்( எளிய நிகழ்ச்சியினை விரைவாக,சிறப்பாக செய்தவர்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை என மாநில தலைவர் சொன்ன வார்த்தைகள் சிலிர்ப்பானவையே) கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Check Also

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஷேபா பள்ளியில் ஆண்டு விழா!…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சென்னை சுங்கச்சாவடியில் அமைந்துள்ள  தங்கம் மாளிகையில் மிக பிரமாண்டமான …