கொரோனாவுக்கு முதல் ஊடகவியாளர் பலி….

ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் திரு. வேல்முருகன் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திடீரென உயிரழிந்த சம்பவம் ஒட்டு மொத்த பத்திரிகை, ஊடகவியாளர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் களப்பணியில் உள்ள‌ பத்திரிகையாளர்கள், ஊடகவியாளர்கள் மிகவும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும்.

ஏனெனில் நம்மை நம்பி நம் குடும்பம் இருப்பதை மறந்து விடக் கூடாது. கடமையிலும், செயலிலும் நாம் எத்தகைய நிலையில் இருக்க வேண்டும் என்பதை நம் நண்பரது மரணம் நமக்கு உணர்த்தியுள்ளது.
அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவரது குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் உதவியும், மனைவிக்கு நிரந்தர பணியினையும் வழங்குவதாக சுகாதாரத் துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நமது ஜீனியஸ் குழுமம் சார்பாக அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்

– ஜீனியஸ் டீம் –

Check Also

PPFA சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது…

PPFA சார்பாக ஊரடங்கில் தொடர்ந்து மக்கள் பசிப்பிணியினை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு …