கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உள்பட 5 பேர் பலி….

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பத்மநாபன் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறை சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், பத்மநாபன் வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த வயதான பெண்மணி உயிரிழந்த நிலையில், மேலும் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதன் மூலம் இந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. . இந்த விபத்து நடந்ததை பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தகவல், படங்கள்:
செந்தில்குமார், சேலம்

 

Check Also

கொரோனாவுக்கு முதல் ஊடகவியாளர் பலி….

ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் திரு. வேல்முருகன் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த …