கைகொடுக்குமா விஸ்வரூபம் 2′

விஸ்வரூபம் 2′ முதல் பாகத்தின் நீட்சி மட்டுமல்ல… முன்கதையும் கூட என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. இதன் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழில் ஸ்ருதி ஹாசனும், இந்தியில் ஆமிர் கானும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் ட்ரெய்லரை தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர்.

ஆனாலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தினார் கமல்ஹாசன்.

அதில் பேசியவர், “எங்களுக்கு சரியென்று தோன்றுவதைத்தான் உங்களுக்குக் கொடுப்போம். அது ராஜ்கமலின் பழக்கம். ஆனால், இந்த முறை தாமதத்திற்குக் காரணம் ராஜ்கமல் அல்ல. அது உங்களுக்குத் தெரியும். ‘விஸ்வரூபம்’ படத்தின் தாமதத்துக்கே என்ன காரணம் என்பதும் உங்களுக்குத் தெரியும். கிட்டத்தட்ட அதே காரணங்கள் தான் தொடர்ந்தன. ‘தடைகளை வென்றே…’ என்று வரிகளை எழுதிக் கொடுத்த வைரமுத்துவுக்கு நன்றி.

Check Also

மக்களுக்கான சேவைக்காக

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் …