கொச்சியில் உலகின் முதலாவது சூரிய சக்தியால் இயங்கும் விமான நிலையம் திறப்பு

உலகிலேயே சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் செயல்படும் விமான நிலையத்தை கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேற்று திறந்து வைத்தார்.

கொச்சி விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 12 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இந்த மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்த கொச்சி விமான நிலைய நிறுவனம் முதற்கட்டமாக கடந்த மார்ச் 2013-ல் 100 கிலோவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட சோலார் பிளான்டை விமான நிலையத்தின் வருகை முனைய கட்டிடத்தின் கூரையில் அமைத்தது. கிரிட் முறையில் வடிவமைக்கப்பட்ட இதில் பேட்டரிக்கு பதிலாக ஸ்டிரிங் இன்வெர்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

இது வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து, விமான நிலைய வளாகத்திலும், கூரையிலும் மீண்டும் 1 மெகாவாட் சோலார் பிளான்டை அமைத்தது. பாதி சோலார் பேனல்கள் விமான நிலைய கூரைகளிலும், பாதி தரையிலும் அமைக்கப்பட்டன. ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் இந்த சோலார் பிளான்ட் அமைக்கப்பட்டது. சோலார் மூலம் விமான நிலையம் இயக்கப்பட்ட பிறகு, இதுவரை 550 மெட்ரிக் டன் அளவுக்கு கார்பன் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது விமான நிலையம் முற்றிலுமாக சோலார் மயமாக்கப்பட்டுள்ளது.

கார்கோ காம்ப்ளக்ஸ் அருகே சுமார் 45 ஏக்கர்கள் நிலப்பரப்பில் 46,150 சோலார் பேனல்களுடன் கூடிய 12 மெகாவாட் சோலார் பவர் பிளான்டை கேரள முதல்வர் உம்மன்சாண்டி தொடங்கி வைத்தார். இதன்மூலம் விமான நிலையத்திற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று, விமான நிலைய நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. முழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் என்ற பெருமையையும் கொச்சி விமான நிலையம் பெற்றுள்ளது.

Check Also

நடிகை சரண்யா மோகன் திருமணம் நடைபெற்றது!

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சரண்யா மோகனின் திருமணம் கேரளாவின் ஆலப்புழாவில் நேற்று நடைபெற்றது. திருவனந்தபுரத்தைச் …