கொரோனோ வைரஸை மக்களிடமிருந்து விரட்டும் பணியில் PPFA!

26.03.2020 வியாழக்கிழமை காலை 8 மணியளவில், திருவான்மியூர் மண்டலம் 10, வார்டு 181 , பகுதி 38 பகுதியில் உள்ள மருதீஸ்வரர் நகர் மற்றும் எல்.பி. ரோடு, சுப்பு தெரு, காமராஜ் நகர், சிவகாமிபுரம் ஆகிய அனைத்து தெருக்களிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் வண்ணம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையினரின் அனுமதியுடன் நடைபெற்ற விழாவில் சென்னை பெருநகர மாநகராட்சி துறை ஊழியர்களுடன் நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி மாநில இளைஞர் அணி இணை செயலாளர் திரு வாசுதாசன், திரு சேகர் ஆகியோரது ஏற்பாட்டில் வேளச்சேரி அரிமா சங்கமும் இணைந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்களுக்கு முக கவசம், கையுறை வழங்கப்பட்டது. இதில் உதவி செய்த ஊழியர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

Check Also

தொடர் களப்பணியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்…

சென்னையில் அண்மையில்  பெய்த பெரு மழையால் உணவின்றி தவித்த மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு, உடை …