கோவையில் கமல்… வேர்வையில் கட்சிகள்…

மக்கள் நீதி மய்யம் தலைவர் ( இவரு நிரந்தர தலைவராமே) திரு கமல்ஹாசன்  சென்னையில் ஏதாவது ஒரு தொகுதி குறிப்பா மயிலைன்னு சொல்லிட்டு இருந்தவங்க. தடலான்னு கோவை தெற்கு வேட்பாளராக களம் இறங்கிட்டார்.

    மனுஷன் ஏதோ கோவை தான் தனது பிறந்த ஊரூன்னு இங்கேயே தங்கி கோவைவாசியாகவே மாறிவிட்டாராமே.

சாம்பிளுக்கு சொன்னா தனது ஜாகையிலிருந்து காலை 7 மணிக்கெல்லாம் நடைபயணமா கிளம்பி, பூ விற்கும் பெண்மணிகளை சந்தித்து ” வியாபாரம் எப்படி” ன்னு நலம் விசாரிப்பது, ஓட்டலில் நுழைந்து டீ குடித்தப்படி அரட்டைன்னு போகுதாம். அதோட ரவுண்ட்ஸ்ல இருக்கறச்ச, எதிர்க்க யாரவது வந்த பேசியபடி செல்பி அதுவும் தாய்க்குலங்கள்ன்னா குஷியுடன் போட்டோ போஸ்‌. இதனை கூட வரும் நபர்கள் வளைந்து, வளைந்து போட்டோ எடுப்பதும் ரொம்ப தான் “ஸாரி கொஞ்சம் ஓவர்’ என மற்ற கட்சி வேட்பாளர்கள் புலம்பும் அளவுக்கு வைத்துள்ளாராம். அது சரி ஜெயிச்சா எம்.எல்.ஏ. வா வந்துட்டா.இந்த சாகசங்கள் தொடருமா. இல்லே இவரை பார்க்க சென்னை ஆழ்வார்ப்பேட்டைக்கு போகனுமான்னு கேட்டா, செல்லமா முறைக்கும் ம.நீ.ம. நிர்வாகிகள். அப்ப தானா எங்கேயோ கேட்ட குரலா ” வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்ன்னு பாட்டு வரும். இதனை நாமும் மற்றவர்களும் கேட்க , நம்மிடம் செல்லமா முறைத்தவர்கள் பம்மி செல்ல, நாமோ ” எஸ்கேப்” ஆனோம்.
செய்தியாக்கம்:
” கிங்மேக்கர்” Ln B.செல்வம்

Check Also

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உள்பட 5 பேர் பலி….

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பத்மநாபன் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறை …