சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: ஈ.வி.கே.எஸ்

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகி 5வது நாளாக இன்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கையெழுத்திட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மதுவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் மேலும் தீவிரம் அடையும் என்றும் கூறினார்.

Check Also

️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…

ஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் …