சர்வதேச டென்னிஸ் தர வரிசை பட்டியலில் இரட்டையர் பிரிவில் சானியா முதலிடம்

சர்வதேச டென்னிஸ் தர வரிசை பட்டியலில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா முதலிடத்தில் உள்ளார்.

உலக டென்னிஸ் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆடவர் ஒற்றையர் தர வரிசையில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 20 இடங்கள் முன்னேறி, 125வது இடத்தை பிடித்துள்ளார். சோம்தேவ் 12 இடங்கள் பின்தங்கி 164வது இடத்தை பெற்றுள்ளார்.

சகெத் மைனெனி 195வது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 218வது இடத்திலும் உள்ளனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 13வது இடத்திலும், லியாண்டர் பயஸ் 33வது இடத்திலும் உள்ளனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதலிடத்திலும், சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் 2வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

Check Also

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. …