சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனத்தின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 200 பேர் காயம்

சவுதியின் கோபார் நகரில் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 219 பேர் காயமடைந்தனர்.

சவுதியின் கிழக்கு நகரான கோபாரில் உலகிலேயே மிகப் பெரிய ஆயில் நிறுவனமான சவுதி அராம்கோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் 77 நாடுகளைச் சேர்ந்த சுமார் 61 ஆயிரம் ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர்.

saudi2இவர்களுக்கென தனியாக தங்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மேல் மாடிக்கும் பரவியது. தீயில் கருதி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Check Also

உடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை! 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம்! அனிமேஷன் வீடியோ…

சீனாவில் கடந்த 40 நாட்களாக மழை கொட்டிவருகிறது . இதனால் பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது . இதனால் …