சிங்காரத் தோட்டம், சின்ன சேனியம்மன் திருக்கோயிலில் அன்னதானம்!

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பெளர்ணமி தினங்களில், இராயபுரம், சிங்காரத் தோட்டம், சின்ன சேனியம்மன் திருக்கோயிலில், நடைபெறும் அன்னதானம் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் 23-02-2020 மாலை 7 மணியளவில், தரிசனம் காண வந்த பக்தர்களுக்கு ( சுமார் 300 க்கு மேல்) சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

இது பற்றி நம்மிடம் பேசிய சென்னையிலுள்ள விருதுநகர் நாடார் இந்து நற்பணி மன்ற நிர்வாகிகள், “இந்த அன்னதானம் கடந்த 34 வருடங்களாக செய்து வருவதாகவும், வருகின்ற 34 வது பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளதாகவும் இங்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும் திருப்தியுடன் தங்கள் நேர்த்திக்கடன்களை செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: வே.கந்தவேல்
செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K.சங்கர்

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …