சிறப்பான பணி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய டி ஐ ஜி

வேலூர் காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் எஸ் பி அலுவலகத்தில் நடந்தது.

இதில் டிஐஜி முத்துச்சாமி கலந்துகொண்டு போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 39 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை மற்றும் அறிவுரைகளை போலீசாருக்கு டிஐஜி வழங்கினார். அப்பொழுது வேலு சருகத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர்களான மணிவண்ணன் மணிவண்ணன்,
கிரண் சுருதி,ஆல்பர்ட் ஜான், ஆகியோர் உடன் இருந்தனர்.

Check Also

அணைக்கட்டில் போலீஸ் பயிற்சி பெற்று வந்த பெண் மாயம்!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு போலீஸ் பயிற்சி பெற்று வந்த தர்மபுரி மாவட்டம் கொள்ளை மாரியம்மன் நகர் மணியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் …