பிஞ்சு சுஜித் மறைவுக்கு அஞ்சலி…

திருச்சி மணப்பாறை அருகே நடுநாயக்கன்பட்டியில்
கடந்த 25.10.19 அன்று மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் , (கிட்டத்தட்ட 80 மணி நேரம்) அவனது உயிரற்ற உடலை தான் மீட்க முடிந்தது

தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும், ( உலகளவிலும்) அனைத்து மதத்தினரின் வேண்டுதலும் கானல் நீராகி போனது தான் நிஜம்.

அந்த வகையில் நம்மை பாதித்த இக் குழந்தையின் இழப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ” தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் திரு. Ln N. தினேஷ்ராஜா அவர்கள் ஏற்பாட்டில், இராயபுரம், நாகவல்லி அம்மன் கோயில் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் திரு. “கட்பீஸ்” K. விஜய், இராயபுரம் தொகுதி தலைவர் திரு. ஜெகன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு குழந்தை சுஜித் படத்திற்கு பூக்களால் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் எங்கு ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருந்தாலும், விஜய் மக்கள் இயக்கத்தை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆழ்துளை கிணற்றை மூடித் தருவதாக தெரிவித்துள்ளனர்.

“ஜீனியஸ்” K. சங்கர்
அமுரா

Check Also

நடிகர் விஜய், இவருக்கு இது சோதனை காலம்

நடிகர் விஜய்க்கு இது சோதனை காலம் போல, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் கேட்டு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் …