சென்னையில்‌ பாரத பிரதமர்…

சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார்.
சென்னை விம்கோநகர்- வண்ணாராப்பேட்டை மெட்ரோ ரயில் தடத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் சென்னை கடற்கரை- அத்திபட்டு வரையிலான ரயில் வழித்தடத்தினையும் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்- தஞ்சாவூர்- திருவாரூர் வரை மின்மயம்மாக்கப்பட்ட ஒரு வழிப் பாதை தொடக்க விழாவினையும், கல்லனை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

அர்ஜுன் எம்.பி.டி. MK-IA ரக கவச வாகனத்தை இராணுவத்திடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் அவர்கள் வணக்கம் தமிழ்நாடு, வணக்கம் சென்னை என தமிழில் பேச பலத்த கரவொலியுடன் தன் உரையினை தொடர்ந்தார்.

இந் நிகழ்வில் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் முன்னிலை வகிக்க, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையேற்க, மாண்புமிகு ‌தமிழக துணை முதலமைச்சர் திரு ஓ. பன்னீர்செல்வம் வரவேற்புரையினை நிகழ்த்தினார்.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:
” கிங்மேக்கர்”
Ln B. செல்வம்

Check Also

மக்கள் மருத்துவர் பிறந்தநாள் விழா…

சென்னை,  பழைய வண்ணாரப்பேட்டையில் மக்கள் மருத்துவர் என்று சொன்னாலே சின்ன குழந்தை கூட மறைந்த மருத்துவர் ஜெயசந்திரன் அவர்களது பெயரை …