சென்னையில் மழை… இதுக்கே தள்ளாடுதே…☔

இன்று திடீரென சென்னையில் மழை பெய்தது. முக்கால் மணி நேரம்தான், “சற்று” கூடுதலாக பெய்த மழையால் நகர் முழுவதும் உள்ள சாலைகள் தத்தளித்தது.இதனால் நகரவாசிகள் மிரட்சியுடன் நடக்க வேண்டிய நிலை.

சட்டசபை மற்றும் மாநகராட்சி அறிவிப்புகளில் மட்டும் சாலைகள் சீரமைக்கப்படுவதாக பத்திரிகைகள் தெரிவித்தாலும் இன்னும் நகர் முழுவதும் “நரக” சாலைகளாக தான் இருக்கிறது என்பதை சில மணி நேர அடை மழையில் நாமே கண் கூடாக கண்டோம்.

இதில் ஆட்சியாளர்கள், உயர் மட்ட அதிகாரிகள் வசிக்கும் ஏரியாக்கள் மட்டும் விதிவிலக்கு, இதனை யாரும் கண்டு பொறாமைப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல.

நம்மை ஆள்பவர்கள் வருமுன் காப்போம் என்று சரியான முறையில் மழைநீர் சேமிப்பு மற்றும் வடிகால் கட்டமைப்பினை பாரபட்சமின்றி செய்திருந்தால் தொடர் அடை மழை பெய்தாலும் மழைநீர் கண்ட இடங்களில் தேங்காமல் மட்டுமின்றி, பெய்த மழை நீரினை சேமித்தும் வைத்திருக்கலாம். மக்களும் குடத்தை தூக்கிக் கொண்டு அலைய வேண்டாம்.

இதில் மக்களும் விழிப்புணர்வுடன் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரும்போது மட்டும்தான் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்பதே நிஜம்…☔☂☂

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …