சென்னை இராயபுரம் ஆம் ஆத்மி சார்பில், மக்களின் துயர் நீக்க காய்கறி விற்பனை!

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த சில நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியவாசிய பொருட்கள், காய்கறிகள் விலையேறிய நிலையில் மக்கள் தவித்து வந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு மக்களின் தேவையினை அறிந்த ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் திரு. S.A.N. வசீகரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, உடனடி நடவடிக்கையாக தங்களது சொந்த பயன்பாட்டில் உள்ள வாகனத்தில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மொத்தமாக காய்கறிகளை கொள்முதல் செய்து 06.04.2020 காலை 8 மணி முதல் இராயபுரம், 49 வது வட்டத்தில் ஆதம் தெரு, நாகவல்லி கோயில் அருகே முதல் விற்பனையினை ஆரம்பித்தனர்.

வெங்காயம் 1கிலோ,தக்காளி 1 கிலோ, உருளைக்கிழங்கு 1/2 கிலோ, கொத்துமல்லி 1கட்டு, கறிவேப்பிலை என ரூ 60/ விலையில் வழங்கினர்.

இந்த மக்கள் சேவை பணியில், திரு. முகமது பாரூக் (முன்னாள் மாவட்ட செயலாளர்), திரு. கைசர் பாஷா (மாநில மகளிர் அணி பொருளாளர்), திருமதி சோபியா (வட சென்னை மாவட்ட மகளிர் அணி‌செயலாளர்), திரு.செல்வம் (இராயபுரம் தொகுதி செயலாளர்), திரு. சபிருல்லா (இராயபுரம் பகுதி பொருளாளர்), திரு. அன்வர் பாஷா (இராயபுரம் தொகுதி தலைவர்), திரு. சபுருல்லா, திரு. மா.பாஷா (உறுப்பினர்கள்) ஆகியோர் களப்பணியில் மக்களுக்கு சேவையாற்றினர்.

சென்னை இராயபுரம் ஆம் ஆத்மி கட்சியினரின் இந்த பணி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்
“ஜீனியஸ்” K. சங்கர்
படத்தொகுப்பு : வே. கந்தவேல்

Check Also

பிஜேபி சார்பில் நலத்திட்ட உதவிகள்…

மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பாரதத்தின் பிரதமராக பதவியேற்று முழுமையாக ஏழு ஆண்டுகள் கடந்து எட்டாம் …