சென்னை காசிமேட்டில் குடிசைப்பகுதிகள் பிஜேபி சார்பில் சுத்தம் செய்யப்பட்டது…

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய துணை பொருப்பாளர் திரு. சுதாகர் ரெட்டி அவர்கள் சென்னை, காசிமேடு, இந்திராநகர் பகுதிக்கு இன்று  தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் அதிரடியாக வருகைத் தந்தார்.

பாரத பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திரமோடி அவர்களது 71 வது பிறந்தநாளையொட்டி,சேவா சமர்ப்பணம், சுவச் பாரத் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குடிசை பகுதியும் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் சுதாகர் ரெட்டி அவர்கள் மீனவ மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மீனவ மக்களின் குறைகள் மீன்வளத்துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறி விரைவாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வின் போது பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Check Also

தமிழ்நாடு முதல்வரது 2 ஆம் கட்ட கொரோனா நிதி…

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த இரண்டாம் கட்ட கொரோனா நிதி ரூ. 2,000 மற்றும் …