சென்னை திருவேற்காட்டில், மருத்துவ கம்பெனி மேலாளரின் வீட்டில் திருடியவர்களுக்கு “காப்பு” கட்டிய காவல்துறை…

திருவேற்காடு பல்லவன் நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் திரு. தியாகராஜன். இவர் பிரபல மருத்துவ கம்பெனியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த ஊரடங்கிற்கு முன்பு , தன் மனைவியின் வளைக்காப்பிற்காக திருவாரூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார்.

உடனே ஊர் திரும்ப முடியாத நிலையில் ,இவரது வீட்டினை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த 03.05.2020 அன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்து 5 1/2 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் திருமதி மங்களம் திருவேற்காடு காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு. முருகேசன் அவர்களிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் களத்தில் ஆய்வாளர் திரு. முருகேசன் அவர்களது தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.சைமன், ஹெட்கான்ஸ்டபிள் திரு. பிரபு, திரு. சுரேஷ் ஆகியோர் அந்த தெருவில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் இந்த கொள்ளையில் ஈடுப்பட்ட செளந்தர், பூபதி ஆகியோரிடமிருந்த 5 1/2 பவுன் நகையினை மீட்டு கடந்த 14.05.2020 அன்று இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது பற்றி அப்பகுதிமக்கள் கூறுகையில் புகாரினை பெற்றதும், ஆய்வாளர் திரு. முருகேசன் தன் சகாக்களுடன் 10 நாட்களில் துரிதமாக செயல்பட்ட விதம் பாராட்டத்தக்கது என பெருமிதத்துடன் அவருக்கு நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாக்கம் : ஜீனியஸ் டீம்

Check Also

வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …