சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சர்ச் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பால் பதட்டம்!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜெ.பி. கோயில் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கிறிஸ்துவ கோயில் முழுவதும் தரைமட்டமாக்கி புதியதொரு ஆலயம் எழுப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

காவல்துறையினர் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி தேர்தலுக்கு பிறகு சுமுகமான முடிவுக்கு வரலாம் என கேட்டுக் கொண்டதால் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்தது. இதனால் இன்று நடைபெறுவதாக  இருந்த கைவிடப்பட்டது மற்றும் இந்நிகழ்ச்சிக்கு வருகைதர இருந்த பேராயர் வருகையும் ரத்து செய்யப்பட்டது.

Check Also

சென்னையில்‌ பாரத பிரதமர்…

சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார்.சென்னை விம்கோநகர்- வண்ணாராப்பேட்டை மெட்ரோ ரயில் …