வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் 30 வீடுகளுக்கு மேலாக மழை நீர் புகுந்துள்ளதால் குழந்தைகள், பெரியவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி யுள்ளனர்.

மழை விட்டு வெயில் அடிக்கும் நிலையிலும் வடியாத மழை நீரால் தங்களது வாழ்வாதாரம் விடியுமா என ஏங்கி வரும் அப் பகுதி வாழ் மக்களின் குறைகளை தீர்க்க சென்னை பெருநகர மாநகராட்சி உடனடியாக முன் வரவேண்டும்.

ஒளிப்பதிவு: பிரசாந்த்
செய்தியாக்கம்: “ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

சென்னை இராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் அன்னாபிஷேகம்…

சென்னை இராயபுரம், கல்மண்டபம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் அமைந்துள்ள, காசி விஸ்வநாத சிவபெருமானுக்கு வெகு விமரிசையாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. …