சென்னை மாநகராட்சி 86 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பட்டப்பகலில் படுகொலை

சென்னை மாநகராட்சி 86 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திரு. எம். குரு. அவர் இன்று மதியம் மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அவரின் வீட்டின் அருகே மர்ம‌ நபர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை. 

kuru counsilorசென்னை, மன்னூர்பேட்டை, லொகையா நாயுடு தெரு, நம்பர். 15 ல் வசிப்பவர் எம். குரு. அதிமுக வை சேர்ந்த இவர் அந்தப்பகுதியின் (86 வது வார்டு) கவுன்சிலராகவும் உள்ளார். இவர் இன்று மதியம் 1மணியளவில் தனது வீட்டருகே புதிதாக போடப்பட்டுள்ள சாலைகளை மேற்பார்வையிட்டு கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சராமாரியாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இது சம்பந்தமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …