சென்னை மெட்ரோ ரயில்களில் 20 சதவீதம் கட்டண சலுகை

மெட்ரோ ரயில்களில் கூடுதல் பயணிகளை ஈர்க்க 3 வகையான கட்டண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த கட்டணத்தில் 20 சதவீதம் சலுகையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்துள்ளது.

சென்னையில் ஆலந்தூர் – கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவை கடந்த ஜூன் 29-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் சேவை தொடங்கிய சில நாட்களுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் அதன் பிறகு வார நாட்களில் கூட்டம் குறையத் தொடங்கியது. விடுமுறை நாட்களில் மட்டுமே ஓரளவு கூட்டம் இருந்துவருகிறது. மெட்ரோ ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கூடுதல் பயணிகளை ஈர்க்கும் வகையில் 3 வகையாக சலுகை கட்டணத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒட்டுமொத்த கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் கட்டண சலுகையை பெற முடியும். குறிப்பிட்ட 2 நிறுத்தங்களுக்கு இடையே தினமும் பயணம் செய்வோருக்கு சலுகை அளிக்கப்படுகிறது.

Check Also

சென்னையை நெருங்கும் “நிவர்”

இன்னும் 6 மணி நேரத்தில் புதுச்சேரி, சென்னையை தாக்க உள்ள “நிவர்” புயலின் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. …