சென்னை, வேளச்சேரியில் கோடை தாகம் தணிக்க PPFA சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு

சென்னையில் கோடை வெயில் உச்சியை பிளக்கும் வேளையில், வேளச்சேரியில் பொதுமக்களின் கோடை தாகம் தணிக்க 7 வது ஆண்டாக இந்த ஆண்டும், நீர் மோர் பந்தல் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA), தென் சென்னை மாவட்டம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் பாலமுருகன் நகர் (324 ஏ6)  சார்பாக திறக்கப்பட்டது.

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA), தென் சென்னை மாவட்டம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் பாலமுருகன் நகர் (324 ஏ6) இணைந்து நடத்திய 7ஆம் ஆண்டு ” நீர் மோர் பந்தல் திறப்பு விழா ” வேளச்சேரி, தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில், PPFA தென் சென்னை மாவட்டத் தலைவர் ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகிக்க மாநில துணை செயலாளர் திரு. ஜெ. ஜெ. வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாநில தலைவர் திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் ” செயல் சிங்கம்” திரு. லயன் சி. பாலகிருஷ்ணன் ஆகியோரது திருக்கரங்களால் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் கே. சங்கர், முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமி நாராயணன், வட சென்னை மாவட்டம்(கி)தலைவர் அ. மதன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி. மோகனசுந்தரம், பி. பாலமுருகன், எஸ்.எம் பாஷா ஆகியோர் கலந்துக் கொண்டனர். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த பழனி, பாலாஜி,(ஜிம்) ராஜா, பாலா, இன்பா, குருமூர்த்தி, ராஜி, சத்யா ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

ஆண்டு தோறும் திறக்கப்படும் இந்த நீர் மோர் பந்தல் 7 ம் ஆண்டாக இந்த ஆண்டும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மே மாதம் முழுவதும் நீர் மோர் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் தேவைப்பட்டால் ஜூன் மாதமும் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். 

ஜீனியஸ் டிவி சார்பாக தென்சென்னை மாவட்ட PPFA மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் பாலமுருகன் நகர் (324 ஏ6) நிர்வாகிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

“ஜீனியஸ்” சங்கர்
அமுரா

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …