ஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு: இளங்கோவன் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் எங்கும் பரபரப்பு நிலவுகிறது.

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட அதிமுகவினர், இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்தனர். அதே போல, நந்தம்பாக்கத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டு முன்பும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்காசி, மேலகரம் தஞ்சாவூர், கரூர், நாமக்கல், விழுப்புரம், ஈரோடு, திருப்பூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர், ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர், முதல்வர் சந்திப்பைக் கொச்சைப்படுத்தி பேசியதாகக் கூறி,   காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனைக் கண்டித்து, அவரது உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …