டியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில்,  ” நோட்டாவை தவிர்ப்போம்”  “100  சதவிதம் ஓட்டு போடுவோம்” ” ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம்”  என்பதை வாக்காளர்களிடையே வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரசுரம் 05.04.2021 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், இராயபுரம், எம்.சி.ரோடு, சுழல் மெத்தை (காமாட்சி அம்மன் ஆலயம்) அருகே தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வடசென்னை மாவட்டம் சார்பில் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவர் “சொல்லின் செல்வர்” திரு. D.S.R.சுபாஷ் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்,  அவர்கள் தலைமையில், பதாகைகளை ஏந்தி சுழல் மெத்தையிலிருந்து நடை ஊர்வலமாக புறப்பட்டு கல்மண்டபம் தொலைபேசி வரை சென்று, மீண்டும் சுழல்மெத்தை வந்தடைந்தனர். வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். 

திருமதி. கெளரி, மூத்த பத்திரிகையாளர் திரு. M.D. ராமலிங்கம், டியுஜெவின்          வடசென்னை மாவட்ட துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியருமான “கிங் மேக்கர்” திரு. Ln B. செல்வம், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான ” ஜீனியஸ்” K.சங்கர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி உதவி நிர்வாக ஆசிரியருமான திரு. Ln M. நாகராஜ், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளர் திரு.P.K. மோகனசுந்தரம், செய்தியாளர்கள் திரு. D.ராஜலிங்கம், திரு.L. செல்வநாதன்,   திரு. A.M. ரஷீத், திரு. V. கந்தவேல், மீடியா நிவாஸ், திரு. அருண்குமார், அற்புதங்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.     

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்: “ஜீனியஸ்” K.சங்கர்  உதவி: V.கந்தவேல்

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …