தந்தையும், மகனும் உதார் பேச்சில்…

தேர்தல் வரும் முன்னரே பாட்டாளி மக்கள் கட்சி ஏதோ தன் இனமக்களின் பாதுகாவலன் என்பதை நிரூபணம் செய்வதற்காகவே இட ஒதுக்கீடு வேண்டும் என கோரி இரயில், சாலை மறியல் செய்து மக்களின் அதிருப்தியினை சம்பாதித்தனர். அப்பவும் ஆளுந்தரப்பு அவர்களை கடுமையாக கண்டிக்காமல் சில மாவட்டங்களில் அவர்களது தயவு தேவை என்பதால், தேர்தல் அறிவிப்பு சில மணி நேரத்திற்கு முன்பாக அவர்கள் கேட்டதிலிருந்து பாதியாக இட ஒதுக்கீடு செய்து பாட்டாளி மக்கள் கட்சியினரை குஷிப்படுத்தியதால் இதுக்கு இதாவது கிடைத்ததே என எண்ணி புளங்காகிதம் அடைந்த தந்தையும், மகனும் அவர்களது கூட்டணியில் இணைந்துள்ளனர்

ஏற்கனவே அஇஅதிமுக தொண்டர்களிடையே இவர்களது வருகையில் பிடிமானம் இல்லை என்பது இவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஒத்துழைப்பதில்லை. இதனால் மகன் முதல்வரிடம் குறைப்பட்டுக் கொள்ள முதல்வரோ தனது கட்சியினருக்கு பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு தர “அன்பு’ கட்டளையே இட்டுள்ளாராம். அதனாலதான் என்னவோ தந்தை, தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் இ.பி.எஸ்., ஆட்சியில் எந்த குற்றம் (இவர் செய்த ஆட்டூழியம் இதில் சேராது) குறையொன்றுமில்லை கண்ணா என்ற ரீதியில் அறிக்கை விடுகிறார்.

மகனோ தங்கள் கட்சி ரொம்ப நேர்மையானது என்பது போல சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் கருணாநிதி மூன்று முறை வெற்றி கண்டும் அந்த தொகுதியில் என்ன செய்தார்.? இப்போது போட்டியிடும் உதயநிதிக்கும் இந்த தொகுதிக்கும் என்ன சம்பந்தம்.? மன்னாராட்சியாய் நடக்குது இங்கே என கேள்வி எழுப்புகின்றார்.
இங்கே நமக்கு ஒரு டவுட். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தந்தை ராமதாஸ். இளைஞரணி தலைவர் அன்புமணி அப்படியிருக்க மன்னராட்சியும் வாரிசு அரசியலாக தானே எல்லோரும் நடைமு‌றைப்படுத்தி வர இவங்க பேச்சு ஓவராக தானே இருக்குன்னு நாம சொல்ல நம்ம கிட்டேயே இதெல்லாம் அரசியல்ல சகஜம்ப்பான்னு சொல்றவங்களை முறைத்து தான் பார்க்க வேண்டியிருக்கு.
” ஜீனியஸ்” கே. சங்கர்

Check Also

அன்னையின் நினைவு நாளில்…அன்னதானம்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி …