தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு வருமா…?

கடந்த வருடம் 2020 மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே கொரோனா தாக்கம் தலைத்தூக்க ஆரம்பிக்க முதலில் அலட்சியமாக இருந்த அரசு நிர்வாகம் வெளிநாட்டு பயணிகளால் நோய் பரவல் அதிகமான வேளையில் தான் விழித்துக் கொண்டது. இதனால் 2020 மார்ச் மாத கடைசி வாரத்தில் “ஊரடங்கினை” அமுல்படுத்தி கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு மேலாக பல்வேறு தளர்வுகள் செய்தும், களத்தில் குதித்த மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர், மருத்துவர்களின் பங்களிப்பில் முழுமையான பாதிப்பினை தடுத்தியது பாராட்டத்தக்கது. இருந்தாலும் சுகாதாரத்துறை அவ்வப்போது அறிவித்த முககவசத்தின் அவசியம், கூட்டம் சேராமல் இடைவெளி  என்பதை தற்போது மக்கள் சுத்தமாக மறந்து விட்டு உலா வருகின்றனர். கொரோனா தாக்கம் ஒரு வருடத்திற்கு பின் குறைந்தாலும் மீண்டும்  இரண்டாவது அலை பரவி வருவதால் மக்கள் இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ஏன சுகாதாரத்துறை எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

   ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு இன்னும் சில மாதங்களுக்கு நீடித்துள்ள நிலையில் இந்தியாவிலும் இரண்டாம் அலை துவங்கி விட்டதால் உஷாரப்படுத்தப்பட்டு வருகிறது.மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களிலும் இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ள நிலையில் நாம் உஷாராக இருக்க வேண்டாமா?

   இந்நிலையில்  வருகின்ற ஏப்ரல் மாதங்களில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபேறவுள்ளதாலும் நம் அரசியலாவாதிகளின் அலப்பரைகள் ஆரவாரமாக இருக்கும் என்பதால் நோய் தாக்கம் அதிகரிக்க வாயப்புகளே அதிகம்.

   தேர்தல் நாளில் பல்வேறு கட்டுப்பாடுகளை ஆணையம் விதித்ததுள்ளது. அதன்படி முககவசம் அவசியம், தனி மனித இடைவெளி எனபது மட்டுமல்லாது கையுறை அனைத்து வாக்களர்களுக்கும் இலவசம் என அதிரடியாக அறிவித்திருப்பது வரவேற்கதக்கது.

     இந்த நிலையில் முககவசம் அணியாமல் உலா வந்தால் அபராதமும் விதிக்கப்படும் என அறிவித்தும் நம்மில் நூறில்  தொண்ணூறு சதவீதம் பேர் கவசமின்றி உலா வந்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

    இதுப் பற்றி மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்த போது கடந்த வருடத்தை போலவே நோய் பாதித்த பகுதிகளில் உள்ள  தெருக்களை அடைப்பது ( ஒரு தெருவில் மூன்று நபர்களா பாதிக்கப்பட்டாலே) அவர்களுக்கு  கள உதவிக்கும் ஏற்பாடு செய்து தரப்படும் என சொல்லியவர்களை மடக்கி, ” மீண்டும் ஊரடங்கு” வருமோ என கேட்க நம்மை அன்பாக முறைத்து விட்டு, தற்போதைய சூழலில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதால் கொரோனா தடுப்பு பணியில் சுணக்கம் காண்பது உண்மை என ஒத்துக் கொண்டனர்.

    இருக்கும் சூழலை பார்க்கும் போது தேர்தல் முடிந்த பின் ஊரடங்கு அமல் செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. நம் மக்களின் ஒத்துழைப்பு தான அவசியம் என்பதே நாம் களத்தில் ரவுண்ட் அடித்த போது கிடைத்த உண்மை.

  உஷாராக இருந்தால் பிழைத்தோம். இல்லையெனில் மீண்டூம் ஊரடங்கில் அவதிபட வேண்டியது தான்.

   செய்தியாக்கம்:

” கிங்மேக்கர்’ Ln B.

   செல்வம்

Check Also

பசியால் தவிக்கும் மக்கள்… தொடருது PPFA வின் களப்பணி…

சென்னையில் புயல் பாதிப்பால் மழை ஓய்ந்தாலும் இன்னும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் சில பகுதிகளில் வடியாமலும், வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையிலும் …