தமிழக காங்கிரஸ் களமிறக்கிய நட்சத்திரம் நடிகை மும்தாஜ்!

தமிழக காங்கிரஸ் கட்சி பிரசாரத்துக்காக தமது பிரசார பீரங்கியாக நடிகை மும்தாஜை களம் இறக்கியுள்ளது,

அரக்கோணம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராஜேஷுக்கு ஆதரவாக ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், அரக்கோணம் ஆகிய இடங்களில் மும்தாஜ் கொஞ்சும் தமிழில் பிரச்சாரம் செய்தார்.

தொடர்ந்து மும்தாஜ் பேசுகையில், “நமது வேட்பாளர் லண்டனில் படித்தவர், தமிழக மக்களுக்கு உழைப்பதற்காக அங்கிருந்து பிளேன் பிடித்து வந்துள்ளார். அதனால்தான் ராகுல்காந்தி இவருக்கு டிக்கெட் கொடுத்துள்ளார்” என்றார்.

காங்கிரஸ் கூட்டங்களில் நடிகை மும்தாஜை பார்க்க இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. அரக்கோணம் பழைய பஸ் நிலையம், காந்தி சிலை ஆகிய இடங்களிலும் மும்தாஜ் பிரசாரம் செய்வார் என காங்கிரஸ் அறிவிப்பு செய்திருந்தது.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published.